கார்-மோட்டார் சைக்கிள் மோதல்; போலீஸ் சூப்பிரண்டு அலுவலக ஊழியர் பலி
செம்பட்டி அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் போலீஸ் சூப்பிரண்டு அலுவலக ஊழியர் பலியானார்.
செம்பட்டி:
செம்பட்டி அருகே உள்ள எஸ்.பாறைப்பட்டியை சேர்ந்தவர் சுந்தரபாண்டியன் (வயது 41). இவர், திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்து வந்தார். நேற்று காலை இவர், பணிக்கு தனது மோட்டார் சைக்கிளில் திண்டுக்கல் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
திண்டுக்கல்லை அடுத்த மீனாட்சிநாயக்கன்பட்டி அருகே வந்தபோது அந்த வழியாக சென்ற கார், மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த சுந்தரபாண்டியனை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தாடிக்கொம்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே பிரேத பரிசோதனை செய்யப்பட்டு சுந்தரபாண்டியனின் உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் செம்பட்டி அருகே எஸ்.பாறைப்பட்டியில் உள்ள சுடுகாட்டில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.
முன்னதாக, சுந்தரபாண்டியன் உடலுக்கு திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் நேரில் சென்று மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். விபத்தில் பலியான சுந்தரபாண்டியனுக்கு சங்கீதா (35) என்ற மனைவியும், பிரபாகரன் (14) பிரணாப் (10) ஆகிய 2 மகன்களும் உள்ளனர்.
Related Tags :
Next Story