வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு பிரசார வாகனம் கலெக்டர் தொடங்கி வைத்தார்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு பிரசார வாகனத்தை கலெக்டர் திவ்யதர்சினி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
தர்மபுரி:
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு பிரசார வாகனத்தை கலெக்டர் திவ்யதர்சினி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பிரசார வாகனம்
தர்மபுரி மாவட்டத்தில் தர்மபுரி நகராட்சி மற்றும் 10 பேரூராட்சிகளில் நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வருகிற 19-ந்தேதி நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு வாக்காளர்கள் அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் தேர்தல் ஆணையத்தின் சார்பில் விழிப்புணர்வு குறும்படம் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த வாக்காளர் விழிப்புணர்வு குறும்படங்களை செய்தி மக்கள் தொடர்புத் துறையின் அதிநவீன மின்னணு வீடியோ வாகனம் மூலம் ஒளிபரப்ப மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. இதன்படி தர்மபுரி கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்து வாக்காளர் விழிப்புணர்வு பிரசார வாகனத்தை கலெக்டர் திவ்யதர்சினி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
விழிப்புணர்வு
இந்த வாக்காளர் விழிப்புணர்வு பிரசார வாகனத்தின் மூலம் வருகிற 18-ந் தேதி வரை தர்மபுரி நகராட்சி பகுதி, காரிமங்கலம், பி.மல்லாபுரம், கம்பைநல்லூர், கடத்தூர், பாப்பிரெட்டிப்பட்டி, பாலக்கோடு, பாப்பாரப்பட்டி, அரூர், மாரண்டஅள்ளி, பென்னாகரம் ஆகிய 10 பேரூராட்சிகளில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களை தேர்வு செய்து நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் விழிப்புணர்வு குறும்படம் திரையிடப்படுகிறது. அப்போது வாக்களிப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது.
இந்த நிகழ்ச்சியில் உதவி கலெக்டர் சித்ரா விஜயன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் மாரிமுத்து ராஜ், உள்ளாட்சி தேர்தல் வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிச்சந்திரன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story