மனைவியிடம் தகராறு கழுத்தை அறுத்து கட்டிட மேஸ்திரி தற்கொலை


மனைவியிடம் தகராறு கழுத்தை அறுத்து கட்டிட மேஸ்திரி தற்கொலை
x
தினத்தந்தி 7 Feb 2022 11:10 PM IST (Updated: 7 Feb 2022 11:10 PM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி அருகே மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் கழுத்தை அறுத்து கட்டிட மேஸ்திரி தற்கொலை செய்து கொண்டார்.

பாப்பாரப்பட்டி:
தர்மபுரி மாவட்டம் இண்டூர் அருகே உள்ள நத்தஅள்ளி கிராமத்தை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 48). கட்டிட மேஸ்திரி. இவர் கடந்த சில மாதங்களாக பிரகாஷ் வேலைக்குச் செல்லாமல் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் மனைவியிடம் அடிக்கடி செலவுக்கு பணம் கேட்டு தகராறு செய்துள்ளார். கடந்த 2-ந் தேதி செலவுக்கு பணம் கேட்டு பிரகாஷ் தனது மனைவியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். அவர் பணம் தர மறுத்துவிட்டதால் ஆத்திரமடைந்த பிரகாஷ் கத்தியால் கழுத்தை அறுத்து கொண்டார். அலறல் சத்தம் கேட்ட மனைவி மற்றும் உறவினர்கள் அவரை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று முன்தினம் பிரகாஷ் இறந்தார். இது குறித்து இண்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story