116 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 473 பேர் போட்டி
நாகை மாவட்டத்தில் உள்ள 2 நகராட்சிகள், 4 பேரூராட்சிகளில் உள்ள 116 வார்டுகளில் 473 பேர் போட்டியிடுகின்றனர். 191 பேர் வேட்பு மனுவை வாபஸ் பெற்றனர்.
வெளிப்பாளையம்:
நாகை மாவட்டத்தில் உள்ள 2 நகராட்சிகள், 4 பேரூராட்சிகளில் உள்ள 116 வார்டுகளில் 473 பேர் போட்டியிடுகின்றனர். 191 பேர் வேட்பு மனுவை வாபஸ் பெற்றனர்.
உள்ளாட்சி தேர்தல்
நாகை மாவட்டத்தில் நாகை, வேதாரண்யம் ஆகிய 2 நகராட்சிகள் மற்றும் திட்டச்சேரி, கீழ்வேளூர், வேளாங்கண்ணி, தலைஞாயிறு ஆகிய 4 பேரூராட்சிகளுக்கு வருகிற 19-ந்தேதி (சனிக்கிழமை) நகர்ப்புற உள்ளாட்சிதேர்தல் நடக்கிறது.
நாகை நகராட்சியில் 3 6 வார்டுகளுக்கு 273 பேரும், வேதாரண்யம் நகராட்சியில் 21 வார்டுகளுக்கு 154 பேரும், கீழ்வேளூர் பேரூராட்சியில் 15 வார்டுகளுக்கு 52 பேரும், வேளாங்கண்ணி பேரூராட்சியில் 15 வார்டுகளுக்கு 67 பேரும், தலைஞாயிறு பேரூராட்சியில் 15 வார்டுகளில் 77 பேரும், திட்டச்சேரி பேரூராட்சியில் 15 வார்டுகளில் 62 பேரும் வேட்புமனுக்கள் தாக்கல் செய்திருந்தனர். இதில் வேட்பு மனுக்கள் பரிசீலனையிலின் போது17 மனுக்கள் நிராகரிக்கபட்டது.
473 பேர் போட்டி
இந்நிலையில் வேட்பு மனுக்களை திரும்ப பெற கடைசி நாளான நேற்று நாகை நகராட்சியில் 98 பேர் வேட்பு மனுவை வாபஸ் பெற்றனர். ஒருவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இதனால் 170 பேர் களத்தில் உள்ளனர்.
வேதாரண்யம் நகராட்சியில் 46 பேர் வேட்பு மனுவை வாபஸ் பெற்றதால் 96 பேர் களத்தில் உள்ளனர். திட்டச்சேரி பேரூராட்சியில் 7 பேர் வேட்பு மனுவை வாபஸ் பெற்றதால் 54 பேர் களத்தில் உள்ளனர். வேளாங்கண்ணி பேரூராட்சியில் 19 பேர் வேட்பு மனுவை வாபஸ் பெற்றதால் 46 பேர் களத்தில் உள்ளனர்.
கீழ்வேளூர் பேரூராட்சியில் 2 பேர் வேட்பு மனுவை வாபஸ் பெற்றதால் 49 பேர் களத்தில் உள்ளனர். தலைஞாயிறு பேரூராட்சியில் 19 பேர் வேட்பு மனுவை வாபஸ் பெற்றதால் 58 பேர் களத்தில் உள்ளனர். மாவட்டத்தில் மொத்தம் 116 வார்டுகளில் 473 பேர் போட்டியிட களத்தில் உள்ளனர்.
Related Tags :
Next Story