போலீசார் அணிவகுப்பு ஒத்திகை
வலங்கைமான் பேரூராட்சியில் போலீசார் அணிவகுப்பு ஒத்திகை நடந்தது.
வலங்கைமான்:
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பேரூராட்சியில் 15 வார்டுகள் உறுப்பினர் பதவிக்கான தேர்தல் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சியினர் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் நடத்தும் அலுவலர்கள் வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடைபெறுவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். வலங்கைமான் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பணம் மற்றும் பரிசுப்பொருட்கள் வழங்கப்படுகிறதா? என்பதை கண்காணிக்க தாசில்தார் இஞ்ஞாசிராஜ் தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் சுழற்சி முறையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் நேற்று போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயா தலைமையில் தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபடுவதற்காக மகாமாரியம்மன் கோவிலில் இருந்து கும்பகோணம் ரோடு கடைத்தெரு வழியாக போலீசார் அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்றது.
Related Tags :
Next Story