வீட்டின் கதவை உடைத்து 2 பவுன் நகை-ரூ.10 ஆயிரம் திருட்டு


வீட்டின் கதவை உடைத்து 2 பவுன் நகை-ரூ.10 ஆயிரம் திருட்டு
x
தினத்தந்தி 7 Feb 2022 11:50 PM IST (Updated: 7 Feb 2022 11:50 PM IST)
t-max-icont-min-icon

மன்னார்குடி அருகே வீட்டின் கதவை உடைத்து 2 பவுன் நகை மற்றும் ரூ.10 ஆயிரம் திருட்டு போனது.

மன்னார்குடி:
மன்னார்குடியை அடுத்த கூப்பாச்சிக்கோட்டையை சேர்ந்தவர் நடராஜன். இவர் வெளிநாட்டில் உள்ளார். இவரது மனைவி லட்சுமி (வயது 37). இவர் கடந்த 5-ந்தேதி இரவு வீட்டை பூட்டிவிட்டு உறவினர் வீட்டு விசேஷத்தில் கலந்து கொள்ள சென்றுவிட்டார். மறுநாள் காலையில் வந்து பார்த்தபோது வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது அங்கு பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 2 பவுன் நகை மற்றும் ரூ.10 ஆயிரம் ஆகியவை திருட்டு போனது. இதுகுறித்து லட்சுமி பரவாக்கோட்டை போலீசில் கொடுத்த புகாரின் பேரில் பரவாக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story