பூதப்பாண்டியில் கோர்ட்டு ஊழியர் விஷம் குடித்து தற்கொலை


பூதப்பாண்டியில் கோர்ட்டு ஊழியர் விஷம் குடித்து தற்கொலை
x
தினத்தந்தி 8 Feb 2022 12:18 AM IST (Updated: 8 Feb 2022 12:18 AM IST)
t-max-icont-min-icon

பூதப்பாண்டியில் மனைவி பிரிந்து சென்றதால் கோர்ட்டு ஊழியர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

அழகியபாண்டியபுரம், 
பூதப்பாண்டியில் மனைவி பிரிந்து சென்றதால் கோர்ட்டு ஊழியர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கோர்ட்டு ஊழியர்
தாழக்குடி நடுத்தெரு பகுதியை சேர்ந்தவர் சண்முகராஜா (வயது 30). இவர் பூதப்பாண்டி கோர்ட்டில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு கடந்த ஓராண்டு முன்பு திருமணம் நடந்தது. கருத்து வேறுபாடு காரணமாக  அவருடைய மனைவி பிரிந்து சென்று விட்டதாக கூறப்படுகிறது.
இதனால் சண்முகராஜா மனமுடைந்து காணப்பட்டார். கடந்த சில நாட்களாக சண்முகராஜா யாருடனும் அதிகம் பேசாமல் இருந்தார். அவரை உறவினர்கள் தேற்றி வந்தனர்.
விஷம் குடித்து தற்கொலை
இந்தநிலையில் சண்முகராஜா நேற்று முன்தினம் காலையில் விஷம் குடித்து விட்டு பூதப்பாண்டி பகுதியில் உள்ள கால்நடை மருத்துவமனை முன்பு உள்ள கால்வாய் கரையோரம் மயங்கி கிடந்தார். அவரை அந்த பகுதியினர் மீட்டு பூதப்பாண்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தார். 
பின்னர் மேல் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு  சிகிச்சை பலனின்றி சண்முகராஜா பரிதாபமாக இறந்தார். 
இதுகுறித்த புகாரின் பேரில் பூதப்பாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மனைவி பிரிந்து சென்றதால் கோர்ட்டு ஊழியர் விஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story