குமாி மாவட்டத்தில் 100-க்கும் கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு
100-க்கும் கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு
நாகர்கோவில்,
குமரி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு உச்சபச்சமாக கொரோனா பாதிப்பு 5 ஆயிரத்தை தாண்டியது. அதன்பிறகு படிப்படியாக தொற்று குறைந்து வருகிறது.
இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆயிரத்துக்கும் கீழ் குறைந்த பாதிப்பு, தற்போது 100-க்கும் கீழ் வந்தது. நேற்றுமுன்தினம் 2,426 பேருக்கு சளி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் 93 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. அந்த வகையில் வட்டார அளவில் அகஸ்தீஸ்வரம்-12, கிள்ளியூர்-7, குருந்தன்கோடு-11, மேல்புறம்-15, முன்சிறை-5, நாகர்கோவில்-13, ராஜாக்கமங்கலம்-3, திருவட்டார்-12, தோவாளை-3, தக்கலை-9 மற்றும் கேரளாவில் இருந்து வந்த ஒருவருக்கும், திருநெல்வேலியில் இருந்து வந்த 2 பேருக்கும் என பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
Related Tags :
Next Story