நாடாளுமன்ற தேர்தலிலும் அ.தி.மு.க., பா.ஜனதா கட்சிகள் தனித்து நிற்குமா?சீமான் கேள்வி
நாடாளுமன்ற தேர்தலிலும் அ.தி.மு.க.-பா.ஜனதா கட்சிகள் தனித்து போட்டியிடுமா? என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பினார்.
சிவகங்கை,
நாடாளுமன்ற தேர்தலிலும் அ.தி.மு.க.-பா.ஜனதா கட்சிகள் தனித்து போட்டியிடுமா? என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பினார்.
தேர்தல் பிரசார கூட்டம்
கூட்டத்தில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து பேசினார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
இதுவரை நடந்த எல்லா தேர்தலிலுமே நாங்கள் தனித்துதான் போட்டியிட்டு உள்ளோம். மாற்றம் வேண்டும் என்று மக்கள் நினைக்கின்றனர். மாற்றம் வேண்டும் என்றால், அதுவும் எதிலிருந்து மாற்றம் என்றால், தமிழகத்தில் உள்ள 2 கட்சிகளின் அரசியலில் இருந்தும் மாற்றம் வேண்டும்.
பணபேரம் பேசுகிறார்கள்
நீட் தேர்வை பொறுத்தவரை அது ஒரு தகுதி தேர்வு. இதனால் பிளஸ்-2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர், நீட் தேர்வில் வெற்றி பெற முடியவில்லை என்றால் மருத்துவ படிப்பில் சேர முடியாது. அதே நேரத்தில் பிளஸ்-2 தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவர்கள் நீட் தேர்வில் வெற்றி பெற்றால் எளிதில் சேர்ந்து விடலாம் என்ற நிலை உள்ளது,
அப்படி என்றால் பிளஸ்-2 தேர்வு எதற்காக? மேலும் நீட் தேர்வில் வெற்றிபெற்ற மாணவர்களிடம் தனியார் கல்லூரியில் பணம் வசூலிக்கத்தான் செய்கிறார்கள். வெளிநாடுகளில் மருத்துவ படிப்பு முடித்துவிட்டு தமிழகத்திற்கு பணிபுரிய வரும் மருத்துவர்களிடம் நுழைவு கட்டணமாக ரூ.6 லட்சம் வசூலிக்கின்றனர்.அப்படி இருக்கும்போது நீட் தேர்வில் எப்படி நியாயம் கிடைக்கும்?
தனித்து நிற்குமா?
இந்தியாவில் காங்கிரஸ், பாரதீய ஜனதா என 2 கட்சிகளும் வெவ்வேறாகத்தான் உள்ளன. ஆனால் கொள்கை ஒன்றாகத்தான் உள்ளது. உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடும் அ.தி.மு.க.வும் பா.ஜ.க.வும் 2024-ல் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் தனித்து நிற்குமா?
அதேசமயம் பா.ஜ.க தனித்து நின்று எங்கள் கட்சியை விட கூடுதல் ஓட்டுக்களை பெற முடியுமா? உள்ளாட்சி தேர்தல் என்பது எம்.எல்.ஏ., எம்.பி. தேர்தலை விட மிக சக்தி வாய்ந்தது. இந்த தேர்தலில் தான் அதிக அளவில் பணப்புழக்கம் இருக்கும். அதனால்தான் கொலைகள், கடத்தல், பணபேரம் ஆகியவை நடைபெறுகின்றன.
உள்ளாட்சி தேர்தலில் தலைவர் பதவிக்கு மறைமுக தேர்தல் அறிவித்ததன் மூலமாக பேரம் பேச வாய்ப்பு அதிகம் உள்ளது. இதனால் ஜனநாயகம் செத்துவிடும். பணநாயகம்தான் இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story