புதுக்கடை அருகே பஸ்-மோட்டார் சைக்கிள் மோதல்; வாலிபர் சாவு


புதுக்கடை அருகே பஸ்-மோட்டார் சைக்கிள் மோதல்;  வாலிபர் சாவு
x
தினத்தந்தி 8 Feb 2022 12:43 AM IST (Updated: 8 Feb 2022 12:43 AM IST)
t-max-icont-min-icon

புதுக்கடை அருகே பஸ்-மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் பரிதாபமாக இறந்தார்.

புதுக்கடை, 
புதுக்கடை அருகே பஸ்-மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
இந்த சோக சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
விபத்து
தேங்காப்பட்டணம் அருகே உள்ள பைங்குளம் பகுதியை சேர்ந்தவர் மணி. இவருடைய மகன் தனேஷ் (வயது 23). இவர் நேற்று முன்தினம் இரவு தேங்காப்பட்டணம்-புதுக்கடை சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். 
முக்காடு பகுதியை சென்றடைந்த போது அந்த வழியாக அரசு பஸ் பயணிகளை ஏற்றிக் கொண்டு வந்தது. இந்தநிலையில் மோட்டார் சைக்கிள் மீது பஸ் எதிர்பாராதவிதமாக மோதியது.
சாவு
இந்த விபத்தில் தனேஷ் படுகாயமடைந்தார். உடனே அவரை அக்கம் பக்கத்தை சேர்ந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.
மேலும் இதுதொடர்பாக புதுக்கடை இன்ஸ்பெக்டர் சக்திவேல் வழக்குப்பதிவு செய்து அரசு பஸ் டிரைவர் குமரன் (51) என்பவரை கைது செய்தார்.

Next Story