பரோலில் வந்த ரவிச்சந்திரனுக்கு திடீர் உடல்நலக்குறைவு

பரோலில் வந்த ரவிச்சந்திரனுக்கு திடீர் உடல்நலக்குறைவு
x
தினத்தந்தி 8 Feb 2022 1:12 AM IST (Updated: 8 Feb 2022 1:12 AM IST)
t-max-icont-min-icon

ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதி ரவிச்சந்திரன் பரோலில் வந்த நிலையில் அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் மதுரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

விருதுநகர், 
ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதி ரவிச்சந்திரன் பரோலில் வந்த நிலையில் அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் மதுரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். 
ரவிச்சந்திரன்
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் இருந்த ரவிச்சந்திரன் பரோலில் வெளியே வந்தார். தூத்துக்குடி மாவட்டம் சூரப்பநாயக்கன்பட்டியில் உள்ள தனது இல்லத்தில் தங்கி இருந்தார். 
இந்தநிலையில் நேற்று காலை ரவிச்சந்திரன் தனக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாகவும், லேசாக நெஞ்சு வலிப்பதாகவும் கூறியுள்ளார். உடனடியாக அவரை பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு முதற்கட்ட மருத்துவ பரிசோதனை நடைபெற்றது.
மருத்துவ பரிசோதனை 
பின்னர் மேல் சிகிச்சைக்காக ரவிச்சந்திரன் விருதுநகர் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு, போலீசாரால் அழைத்து வரப்பட்டார். அவருக்கு இதய நோய் சிகிச்சை பிரிவில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.  அவரை டாக்டர்கள் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Next Story