தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டி
திறந்து கிடக்கும் கழிவுநீர் ஓடை
ஆரல்வாய்மொழி, தாணுமாலயன்புதூரில் நெடுமங்காடு தேசிய நெடுஞ்சாலையில் அரசுத் தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் முன் உள்ள கழிவுநீர் ஓடையில் மேல்மூடி இல்லாமல் திறந்து கிடக்கிறது. இதனால் ஏதாவது அசம்பாவிதம் நடப்பதற்கு முன் கழிவுநீர் ஓடையை மூட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-செந்தமிழ்ச்செல்வி, ஆரல்வாய்மொழி.
காத்திருக்கும் ஆபத்து
சாமியார்மடம்-வேர்கிளம்பி சாலையில் பருத்தி வாய்க்கால் பாலம் அருகே சாலையின் பக்கவாட்டில் பள்ளம் ஏற்பட்டு உள்ளது. எனவே இந்த வழியாக இரவு நேரத்தில் செல்பவர்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே பள்ளத்தை மூட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஜெஸ்பின், சிராயன்குழி
நாய்களால் தொல்லை
நுள்ளிவிளை பஞ்சாயத்துக்கு உட்பட்ட பேயன்குழி அரசு உயர்நிலைப்பள்ளி முன்பு நாய்கள் சுற்றி வருகிறது. அவை அந்த வழியாக நடந்து செல்பவர்களை கடிக்கிறது. மேலும் அடிக்கடி சாலையில் ஓடுவதால் வாகனத்தில் செல்பவர்கள் விபத்தில் சிக்கும் அபாயமும் உள்ளது. எனவே நாயை பிடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-முருகன், பேயன்குழி.
மின்விளக்கு எரியவில்லை
பூதப்பாண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட உஜ்ஜயினி மாகாளி அம்மன் கோவில் அருகே உள்ள மின்கம்பத்தில் மின்விளக்கு எரியவில்லை. இதனால் அந்த பகுதியில் இரவு நேரத்தில் நடந்து செல்ல பெண்கள் அச்சப்படுகிறார்கள். எனவே மின்விளக்கு எரிய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-எஸ்.நாராயணசாமி, பூதப்பாண்டி.
விபத்து அபாயம்
குமரி மாவட்டத்தின் 2-வது தலைநகரமான மார்த்தாண்டத்தில் மேம்பாலத்தின்கீழ் உள்ள சாலையில் பெரிய பள்ளம் ஒன்று உள்ளது. இந்த பள்ளம் அந்த வழியாக நடந்து செல்பவர்களை அச்சுறுத்தும் வகையில் உள்ளது. இந்த வழியாக வாகனத்தில் செல்பவர்கள் பள்ளத்தை கவனித்து செல்ல வேண்டும். இல்லாவிட்டால் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விபத்தை ஏற்படுத்த காத்திருக்கும் பள்ளத்தை மூட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஜெயசிங், மார்த்தாண்டம்.
தெப்பக்குளம் தூர்வாரப்படுமா?
நாகர்கோவில் அருகே உள்ள பறக்கை மதுசூதன பெருமாள் கோவிலில் தெப்பக்குளம் உள்ளது. இந்த குளம் கடந்த சில ஆண்டுகளாக தூர்வாரவில்லை. தெப்பக்குளத்தின் தற்போதைய நிலை சுகாதார சீர்கேடு ஏற்படும் வகையில் உள்ளது. எனவே குளத்தை தூர்வார சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- நரேஷ், பறக்கை.
Related Tags :
Next Story