தனியார் பாரில் மது பாட்டில்களை எடுத்து சென்ற போலீசார்
தனியார் பாரில் மது பாட்டில்களை எடுத்து சென்ற போலீசார்
களியக்காவிளை,
குழித்துறையில் உள்ள தனியார் பாருக்கு நேற்று காலையில் போலீசார் சென்று, பூட்டை உடைத்து 500 மது பாட்டில்களை எடுத்து கொண்டு, அங்கிருந்த 2 ஊழியர்களையும் பிடித்து சென்றனர்.
உடனே அங்கிருந்த கண்காணிப்பு கேமரா ஒரு வார பதிவை தனியார் பார் நிர்வாகிகள் எடுத்து, அரசு நிர்ணயித்த படி காலை 11 மணி முதல் இரவு 11 மணி வரை மட்டுமே மதுபானம் விற்பனை செய்வதாகவும். அரசு உத்தரவை மீறி மது விற்பது கிடையாது என்றும் உயர் போலீஸ் அதிகாரிக்கு அனுப்பி வைத்தனர். எனவே முறைப்படி நடவடிக்கை எடுக்காவிட்டால், சட்ட உதவியை நாடப்போவதாகவும் தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த அதிகாரி, தனியார் பாரில் இருந்து கைப்பற்றப்பட்ட மது பாட்டில்கள் மற்றும் பிடித்து வந்த 2 பேரையும் விடுதலை செய்ய உத்தரவு பிறப்பித்தார். அதைத்தொடர்ந்து, பிடித்து வந்த 2 பேரையும் போலீசார் விடுவித்ததோடு, எடுத்து வந்த மது பாட்டில்களை மீண்டும் ஒப்படைத்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story