மகன் இறந்த துக்கத்தில் தூக்குப்போட்டு தாய் தற்கொலை


மகன் இறந்த துக்கத்தில் தூக்குப்போட்டு தாய் தற்கொலை
x
தினத்தந்தி 8 Feb 2022 2:41 AM IST (Updated: 8 Feb 2022 2:41 AM IST)
t-max-icont-min-icon

மதுரையில் வாலிபர் இறந்த துக்கத்தில் தாய் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மதுரை
மதுரையில் வாலிபர் இறந்த துக்கத்தில் தாய் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஐ.டி. பணியாளர்
மதுரை ஜெய்ஹிந்துபுரம் ராமையா மெயின்ரோட்டை சேர்ந்தவர் வெங்கடசாமி, மின்வாரிய ஊழியர். இவரது மனைவி மோகனா என்ற யாசோதா(வயது 56). இவர்களுக்கு 2 மகன்கள் இருந்தனர். அதில் மூத்த மகன் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். 2-வது மகன் சந்தோஷ்குமார்(26). இவர் என்ஜினீயரிங் படித்து விட்டு சென்னையில் உள்ள ஒரு ஐ.டி. கம்பெனி மூலம் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார்.
பின்னர் கொரோனா காரணமாக அங்கிருந்து மதுரை வந்த அவர் கடந்த சில மாதங்களாக வீட்டில் இருந்து பணியாற்றி வந்தார். ஐ.டி. வேலை என்பதால் சந்தோஷ்குமாருக்கு இரவு முழுவதும் கணினியில் வேலை பார்த்தும், பகல் நேரத்தில் ஓய்வு எடுத்தும் வந்துள்ளார். அதேபோல் நேற்று முன்தினம் இரவு சந்தோஷ்குமார் வீட்டின் தனி அறையில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். நேற்று காலை அவரது தாய் மோகனா மகனின் அறைக்கு சென்றார்.
இறந்து கிடந்தார்
அப்போது அவர் கணினி மேஜையில் தலை சாய்ந்தபடி கிடந்தார். மகன் தூங்கிக்கொண்டிருப்பார் என கருதிய மோகனா அவரை எழுப்பினார். ஆனால் அவர் உடலில் எந்த அசைவும் இல்லாமல் இருந்தது.. இதனால் பதற்றம் அடைந்த மோகனா தனது கணவர் மற்றும் அக்கம்பக்கத்தினரை அழைத்தார். அவர்கள் உடனடியாக சந்தோஷ்குமாரை அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்ததில் சந்தோஷ்குமார் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
ஆனாலும் அவர்க்ள அவரை மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்து பார்த்து போது அவர்கள் சந்தோஷ்குமார் இறந்து விட்டதை உறுதி செய்தனர். பின்னர் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரியில் உள்ள பிணவறைக்கு கொண்டு சென்றனர். 
தாய் தற்கொலை
மகனின் திடீர் மரணம், வெங்கடசாமி மற்றும் அவரது மனைவியை நிலைகுலைய செய்தது. இ்ந்தநிலையில் அமைதியாக காணப்பட்ட மோகனா தான் வீட்டிற்கு சென்று மாற்று சேலை அணிந்து வருவதாக கூறி ஆஸ்பத்திரியில் இருந்து வீட்டுக்கு புறப்பட்டார்.
வீட்டுக்கு வந்த அவர் மகனின் இறப்பை ஏற்றுக்கொள்ள முடியாமல் கதறி அழுதார். பின்பு தனிஅறைக்கு சென்ற மோகனா சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதற்கிடையில் வீட்டுக்கு சென்ற மோகனா வெகுநேரமாகியும் வராமல் இருப்பதை கண்டு உறவினர்கள் அங்கு சென்று பார்த்தனர். அப்போது அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஜெய்ஹிந்து புரம் போலீசார் விரைந்து வந்து மோகனா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் இந்த இரு சம்பவங்கள் குறித்தும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 
மகன் இறந்த துக்கத்தில் தாய் தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் அவரது குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியது.

Next Story