வாக்கு எண்ணிக்கை மையத்தை தேர்தல் பார்வையாளர் ஆய்வு
சேரன்மாதேவியில் வாக்கு எண்ணிக்கை மையத்தை தேர்தல் பார்வையாளர் மகேஸ்வரன் ஆய்வு செய்தார்.
நெல்லை:
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந் தேதி நடக்கிறது. இந்த தேர்தலுக்கான இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. நெல்லை மாவட்டத்தில் நெல்லை மாநகராட்சி, அம்பை, விக்கிரமசிங்கபுரம், களக்காடு ஆகிய 3 நகராட்சிகள், 17 பேரூராட்சிகளில் தேர்தல் நடக்கிறது. இதற்காக மொத்தம் 933 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன.
சேரன்மாதேவி, கோபாலசமுத்திரம், மேலச்செவல், முக்கூடல், பத்தமடை, வீரவநல்லூர் ஆகிய பேரூராட்சிகளில் உள்ள வார்டுகளுக்கு நடைபெறுகின்ற தேர்தலில் பதிவாகும் வாக்குகள் சேரன்மாதேவி பெரியார் மேல்நிலைப்பள்ளியில் வைத்து எண்ணப்படுகிறது. இந்த வாக்கு எண்ணிக்கை மையத்தையும், கோபாலசமுத்திரம் பேரூராட்சி வாக்குச்சாவடி மையத்தையும் நெல்லை மாவட்ட தேர்தல் பார்வையாளர் மகேஸ்வரன் நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தனபாலன், மாலதி, சுந்தரவேல், லோபமுத்திரை மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story