நெல்லையில் மது விற்ற 3 பேர் கைது


நெல்லையில் மது விற்ற 3 பேர் கைது
x
தினத்தந்தி 8 Feb 2022 3:13 AM IST (Updated: 8 Feb 2022 3:13 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை மேலப்பாளையம், சந்திப்பு பகுதியில் மது விற்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

நெல்லை:
நெல்லை மாநகர மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி மற்றும் போலீசார் மேலப்பாளையம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் நின்று கொண்டிருந்த 2 பேர் போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்றனர். உடனே போலீசார் அவர்களை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் நெல்லை அருகே உள்ள மேல தாழையூத்து பகுதியை சேர்ந்த மகாராஜன் (வயது 42), தாழையூத்து ஜே.ஜே. நகரை சேர்ந்த சின்னத்துரை (46) ஆகியோர் என்பதும், அவர்கள் அந்த பகுதியில் மது விற்றதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 2 பேரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்து 32 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

இதேபோல் சந்திப்பு கருப்பந்துறை பகுதியில் போலீசார் ரோந்து சென்றபோது, அங்கு மது விற்றதாக முன்னீர்பள்ளம் பகுதியை சேர்ந்த வானுமாமலை (24) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 30 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. 

Next Story