கல்லூரி பேராசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம்


கல்லூரி பேராசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 8 Feb 2022 3:18 AM IST (Updated: 8 Feb 2022 3:18 AM IST)
t-max-icont-min-icon

பாளையங்கோட்டையில் கல்லூரி பேராசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.

நெல்லை:
பாளையங்கோட்டையில் உள்ள ஒரு கல்லூரி நிர்வாகத்தினர், அரசு விதிமுறைகளுக்கு எதிராக செயல்படுவதை கைவிடக்கோரி, கடந்த 2 ஆண்டுகளாக மூட்டா ஆசிரியர் சங்கத்தினர் பல போராட்டங்களை நடத்தினார்கள். இந்த நிலையில் அந்த கல்லூரியில் பணியாற்றும் கல்லூரி பேராசிரியர்கள் நேற்று கல்லூரி வளாகத்திற்குள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர். 

பேராசிரியர்களின் பணியிடை நீக்கத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும், அரசு விதிமுறைகளை பின்பற்றி, கல்லூரி முதல்வரை உடனடியாக நியமனம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இ்ந்த போராட்டம் நடந்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Next Story