மூதாட்டி தூக்குப்போட்டு தற்கொலை
நெல்லை தச்சநல்லூரில் மூதாட்டி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நெல்லை:
நெல்லை தச்சநல்லூர் செல்வ விக்னேஷ் நகர் பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் மனைவி கஸ்தூரி (வயது 73). இவர் கடந்த சில ஆண்டுகளாக உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இதில் மனமுடைந்து காணப்பட்ட கஸ்தூரி நேற்று முன்தினம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவலறிந்த தச்சநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story