மது போதையில் வாகனம் ஓட்டிய 22 பேர் மீது வழக்குப்பதிவு
நெல்லை மாவட்டத்தில் மது போதையில் வாகனம் ஓட்டிய 22 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் கடந்த 2021-ம் ஆண்டு சாலை விபத்துகளினால் 262 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் மது போதையில் வாகனம் ஓட்டி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாகும். இதையடுத்து சாலை விபத்துகளினால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்கும் வகையில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன், பல்வேறு சாலை பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
மதுபோதையில் வாகனம் ஓட்டி வரும் நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து, வாகனங்களை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஒப்படைக்குமாறு போலீசாருக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. அதன்படி கடந்த 4-ந்தேதி முதல் நேற்று முன்தினம் வரை வாகன தணிக்கையில் ஈடுபட்ட போலீசார், இதுவரை மதுபோதையில் வாகனம் ஓட்டி வந்த 22 பேர் மீது வழக்குப்பதிவு செய்து 20 இருசக்கர வாகனங்கள், 2 நான்கு சக்கர வாகனங்கள், லாரி ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர். மாவட்டம் முழுவதும் பொது இடங்களில் முககவசம் அணியாத 131 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story