மாணவியிடம் தவறாக நடக்க முயன்றவர் போக்சோ சட்டத்தில் கைது


மாணவியிடம் தவறாக நடக்க முயன்றவர் போக்சோ சட்டத்தில் கைது
x
தினத்தந்தி 8 Feb 2022 4:04 AM IST (Updated: 8 Feb 2022 4:04 AM IST)
t-max-icont-min-icon

மாணவியிடம் தவறாக நடக்க முயன்றவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

வேப்பந்தட்டை:
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள வெண்பாவூரை சேர்ந்த ஆறுமுகத்தின் மகன் தியாகராஜன்(வயது 28). இவர் ஒரு பள்ளி மாணவியின் கையை பிடித்து இழுத்து தவறாக நடக்க முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது மாணவி சத்தம்போட்டதால், ஓடி வந்த உறவினர்கள் தியாகராஜனை பிடித்து வைத்துக்கொண்டு கை.களத்தூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து அங்கு வந்த போலீசார் தியாகராஜனிடம் விசாரணை நடத்தினர். மேலும் இது குறித்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தியாகராஜனை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Next Story