சிறுமியை கர்ப்பமாக்கிய வெல்டிங் பட்டறை ஊழியர் சிறையில் அடைப்பு


சிறுமியை கர்ப்பமாக்கிய வெல்டிங் பட்டறை ஊழியர் சிறையில் அடைப்பு
x
தினத்தந்தி 8 Feb 2022 4:04 AM IST (Updated: 8 Feb 2022 4:04 AM IST)
t-max-icont-min-icon

சிறுமியை கர்ப்பமாக்கிய வெல்டிங் பட்டறை ஊழியர் சிறையில் அடைக்கப்பட்டார்.

பெரம்பலூர்:
பெரம்பலூர் அருகே உள்ள குரும்பலூரை சேர்ந்த ராமலிங்கத்தின் மகன் விக்னேஷ்(வயது 29). வெல்டிங் பட்டறை ஊழியரான இவர் 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், அந்த சிறுமி தற்போது 3 மாதம் கர்ப்பமாக உள்ளதாகவும் கூறப்படுகிறது. இது குறித்த புகாரின்பேரில் பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயசித்ரா போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து விக்னேசை கைது செய்து பெரம்பலூர் கிளை சிறையில் அடைத்தார்.

Next Story