மடத்துக்குளம் நால் ரோட்டில் ரவுண்டானா அமைக்க வேண்டும்
மடத்துக்குளம் நால் ரோட்டில் ரவுண்டானா அமைக்க வேண்டும்
மடத்துக்குளம் நால்ரோட்டில் தொடர்ந்து நடக்கும் விபத்துகளை தவிர்க்க ரவுண்டானா அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
போக்குவரத்து
மடத்துக்குளம் நால்ரோடு தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இந்த பகுதியில் அரசு மருத்துவமனை, வங்கிகள், பேக்கரிகள், ஏ.டி.எம்.கள் மற்றும் 100 க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. மடத்துக்குளம் தாலுகா பகுதியில் உள்ள 30 க்கும் மேற்பட்ட கிராமங்களின் இணைப்பு சாலைகள் சந்திக்கும் இடமாக நால்ரோடு உள்ளது. இது தவிர கொழுமம் வழித்தடத்தில் உள்ள கண்ணாடிப்புத்தூர், கணேசபுரம், குமரலிங்கம், செல்லும் பஸ்களும் காரத்தொழுவு வழித்தடத்திலுள்ள கழுகரை, சோழமாதேவி, கணியூர், செல்லும் பஸ்களும் உடுமலை வழித்தடத்திலுள்ள கிருஷ்ணாபுரம், நரசிங்கபுரம், பாலப்பம்பட்டி, செல்லும் பஸ்களும் பழனி வழித்தடத்திலுள்ள சாமிநாதபுரம், வயலூர்,புஷ்பத்தூர் செல்லும் பஸ்களும் நின்று செல்லும் இடமாக உள்ளது.4 திசையில் செல்லும் பயணிகளும் இந்த இடத்தை பயன்படுத்துகின்றனர். இதனால் பொதுமக்கள் பயன்பாடு அதிகமான இடமாக உள்ளது. ஒரு நிமிடத்திற்கு 20க்கும் மேற்பட்ட வாகனங்கள் நால்ரோட்டை கடந்து செல்கின்றன. இவ்வளவு நெருக்கடி உள்ள நால்ரோடு பகுதியில் பொதுமக்கள் மற்றும் வாகனங்கள் பயன்பாட்டுக்கு போதிய இடவசதி இல்லை.
கோரிக்கை
இதனால் வாகனங்கள் தாறுமாறாக செல்கிறது. தொடர்ந்து விபத்துகள் நடக்கிறது. விபத்து நடக்காமல் தடுக்க நால் ரோட்டில் ரவுண்டானா அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது
கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் முதல்முறையாக பயணிப்ப வர்களுக்கு மடத்துக்குளத்தில் நால்ரோடு உள்ளது தெரிவதில்லை.இதனால் வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் தொடர்ந்து விபத்துகள் நடக்கிறது. நால்ரோட்டை கடக்கவே அச்சமாக உள்ளது. இதற்கு தீர்வாக நால்ரோட்டில் ரவுண்டானா அமைக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
--------------
Related Tags :
Next Story