சென்னை மாநகராட்சி தேர்தலில் பயன்படுத்த 29 ஆயிரத்து 134 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள்
சென்னை மாநகராட்சி தேர்தலில் பயன்படுத்த 29 ஆயிரத்து 134 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களும் பயன்படுத்தப்பட உள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு வருகிற 19-ந் தேதி நடைபெற உள்ளது. சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களில் உள்ள 200 வார்டுகளில் நடைபெறும் தேர்தலில் 29 ஆயிரத்து 134 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களும், 13 ஆயிரத்து 535 மின் கட்டுப்பாட்டு எந்திரங்களும் பயன்படுத்தப்பட உள்ளது. இந்த வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் மின் கட்டுப்பாட்டு எந்திரங்களை மணலி மண்டல அலுவலகத்தில் உள்ள தனி, தனி அறைகளில் வைத்து ‘சீல்’ வைக்கப்பட்டு, அங்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தேர்தல் நடைபெறுவதற்கு ஓரிரு தினங்களுக்கு முன்பு ஒதுக்கீடு செய்யப்பட்ட வேட்பாளரின் சின்னம் இந்த மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் பொருத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story