சனுப்பட்டியில் குண்டும் குழியுமான தார்ச்சாலை
சனுப்பட்டியில் குண்டும் குழியுமான தார்ச்சாலை
குடிமங்கலம் ஒன்றியத்திற்கு உட்பட்டது கொண்டம்பட்டி ஊராட்சி. இந்த ஊராட்சிக்குட்பட்ட வல்லகுண்டாபுரத்திலிருந்து சனுப்பட்டி செல்லும் சாலை தார் சாலையாக உள்ளது. கிராமப்புறங்களை இணைக்கும் இச்சாலை வழியாக தினமும் ஏராளமான இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள்சென்று வருகின்றன. இப்பகுதிகளில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ள நிலையில் விவசாயிகள் தங்களது விளை பொருட்களை இச்சாலை வழியாக கொண்டு செல்கின்றனர். கிராமப்புறங்களை இணைக்கும் தார்ச்சாலை குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே தார்ச் சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
Related Tags :
Next Story