முக கவசம் அணியாத 193 பேருக்கு அபராதம்


முக கவசம் அணியாத 193 பேருக்கு அபராதம்
x
தினத்தந்தி 8 Feb 2022 5:44 PM IST (Updated: 8 Feb 2022 5:44 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தில் முக கவசம் அணியாத 193 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது

தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் போலீசார் நேற்று முன்தினம் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, சட்டவிரோதமாக புகையிலைப் பொருட்கள் மற்றும் மதுபாட்டில்கள் விற்பனையில் ஈடுபட்ட 19 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 113 புகையிலை பாக்கெட்டுகள் மற்றும் 56 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
இதே போன்று மாவட்டத்தில் கொரோனா விதிகளை மீறிய 23 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். முககவசம் அணியாமல் பொது இடங்களுக்கு சென்ற 193 பேருக்கு போலீசார் அபராதம் விதித்தனர்.

Next Story