வரி செலுத்தாமல் இயங்கிய 3 டிராக்டர்களுக்கு அபராதம்
வரி செலுத்தாமல் இயங்கிய 3 டிராக்டர்களுக்கு அபராதம்
திருப்பூர் கோல்டன்நகர் பகுதியில் உள்ள கல்குவாரி பணிக்கு பயன்படுத்தப்படும் டிராக்டர்கள் உரிய ஆவணங்கள் இன்றி இயங்குவதாக புகார் எழுந்தது. இதையடுத்து திருப்பூர் வடக்கு வட்டார போக்குவரத்து அதிகாரி ஜெயதேவராஜ் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் வேலுமணி, பாலசுப்பிரமணியம் உள்ளிட்ட அதிகாரிகள் சம்பந்தப்பட்ட கல்குவாரிக்கு சென்றனர். பின்னர் அங்கு நின்று கொண்டிருந்த 5 டிராக்டர்களின் ஆவணங்களை அதிகாரிகள் ஆய்வு செய்தபோது 3 டிராக்டர்களுக்கு முறையாக வரி செலுத்தவில்லை என்பது தெரிய வந்தது. இதையடுத்து அந்த 3 டிராக்டர்களுக்கு அதிகாரிகள் ரூ.35 ஆயிரம் அபராதம் விதித்தனர். மேலும் உடனடியாக வரி செலுத்துமாறு டிராக்டர் உரிமையாளருக்கு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.
Related Tags :
Next Story