கூடலூர் வனக்கோட்டத்தில் வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி தொடக்கம்


கூடலூர் வனக்கோட்டத்தில் வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி தொடக்கம்
x
தினத்தந்தி 8 Feb 2022 9:04 PM IST (Updated: 8 Feb 2022 9:04 PM IST)
t-max-icont-min-icon

கூடலூர் வனக்கோட்டத்தில் வனவிலங்கு கணக்கெடுப்பு பணி தொடங்கியது.

கூடலூர்

கூடலூர் வனக்கோட்டத்தில் வனவிலங்கு கணக்கெடுப்பு பணி தொடங்கியது.

வனவிலங்கு கணக்கெடுப்பு

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் பருவ மழைக்காலத்துக்கு முன் மற்றும் பின்பு என ஆண்டுக்கு 2 முறை வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். 

அதன் அருகே உள்ள கூடலூர் வனக்கோட்டத்தில் 4 ஆண்டுக்கு ஒருமுறை வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி நடைபெறுகிறது.

கூடலூர் வனக்கோட்டத்தில் உள்ள கூடலூர், ஓவேலி, நாடுகாணி, தேவாலா, சேரம்பாடி, பிதர்காடு ஆகிய வனச்சரகங்களில் காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது. 

கூடலூரில் வனச்சரகர் கணேசன் மேற்பார்வையில் வன ஊழியர்கள் கணக்கெடுப்பில் ஈடுபட்டனர்.

கால் தடயங்கள், எச்சம்

வனவிலங்குகளின் கால் தடங்கள், எச்சங்கள் கொண்டு அடையாளம் காணுதல், நேரில் பார்வையிடுதல் உள்ளிட்ட பல்வேறு முறைகளில் வன ஊழியர்கள் ஈடுபட்டனர். 

இப்பணியில் தலா 4 பேர் கொண்ட 16 குழுக்கள் பணியாற்றி வருகின்றனர். இதேபோல் தேவாலா வனச்சரகர் ராம்குமார் மேற்பார்வையில் வன ஊழியர்கள் கிளன்ராக் உள்பட வனத்தில் கணக்கெடுப்பு மேற்கொண்டனர்.


Next Story