தபால் ஓட்டுக்கு விண்ணப்பித்த ஊழியர்கள்


தபால் ஓட்டுக்கு விண்ணப்பித்த ஊழியர்கள்
x
தினத்தந்தி 8 Feb 2022 9:32 PM IST (Updated: 8 Feb 2022 9:32 PM IST)
t-max-icont-min-icon

தபால் ஓட்டுக்கு விண்ணப்பித்த ஊழியர்கள்

திருப்பூர் மாநகராட்சியில் 60 வார்டுகளில் 776 வாக்குச்சாவடிகள் உள்ளன. வாக்குப்பதிவு வருகிற 19ந் தேதி நடைபெற உள்ளது. வாக்காளர்களுக்கு பூத் சிலிப் அச்சிட்டு தயாரிக்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. இந்தநிலையில் வருகிற 12ந் தேதி வாக்காளர்களுக்கு வீடு, வீடாக சென்று பூத் சிலிப் வழங்கும் பணியில் அங்கன்வாடி ஊழியர்கள், சத்துணவு ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
இந்த பணிகளில் ஈடுபடும் ஊழியர்களுக்கு தபால் ஓட்டு பதிவு செய்ய வசதி செய்யப்பட்டுள்ளது. இதற்காக நேற்று காலை திருப்பூர் மாநகராட்சி மைய அலுவலகத்துக்கு அங்கன்வாடி ஊழியர்கள், சத்துணவு ஊழியர்கள் வந்தனர். தங்களின் வாக்காளர் அடையாள அட்டை, வாக்குச்சாவடி, வார்டு எண் உள்ளிட்ட விவரங்களை தேர்தல் பிரிவு அதிகாரிகளிடம் தெரிவித்து தங்களுக்கு தபால் ஓட்டு பதிவு செய்வதற்காக விண்ணப்பித்தனர். மொத்தம் எத்தனை பேர் தபால் ஓட்டு கேட்டு விண்ணப்பித்துள்ளனர் என்பதை பதிவு செய்து வார்டு வாரியாக பிரித்து அவர்களுக்கு தபால் ஓட்டு வழங்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

Next Story