திருக்கோவிலூர் அருகே அங்காள பரமேஸ்வரி முருகன் கோவில்களில் கும்பாபிஷேகம்
திருக்கோவிலூர் அருகே அங்காள பரமேஸ்வரி முருகன் கோவில்களில் கும்பாபிஷேகம் திரளான பக்தர்கள் தரிசனம்
திருக்கோவிலூர்
திருக்கோவிலூர் அருகே உள்ள வீரபாண்டி மதுரா புலிக்கல் கிராமத்தில் உள்ள அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று நடைபெற்றது. முன்னதாக யாக பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து மங்கள வாத்திய இசை முழங்க யாக சாலையில் இருந்து புனித நீர் அடங்கிய கலசங்கள் புறப்பாடு நடைபெற்று ராஜகோபுரம், மூலவர் அறையின் கோபுரத்துக்கும், அதைத் தொடர்ந்து விநாயகர், முருகன், பாவடைராயன், மூவர் அம்மன் ஆகிய பரிவார மூர்த்திகளுக்கும் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் வீரபாண்டி, புலிக்கல் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை விழாக் குழுவினர், உபயதாரர்கள் செய்திருந்தனர்.
அதேபோல் திருக்கோவிலூர் அருகே உள்ள ஒதியத்தூர் கிராமத்தில் மலை மீது அமைந்துள்ள அறுபடை அய்யப்பன் முருகன் கோவில் கும்பாபிஷேகமும் வெகு விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக யாக பூஜைகள் முடிந்து மேளதாள இசையுடன் புனித நீர் அடங்கிய கலசங்கள் புறப்பாடு நடைபெற்று ராஜகோபுரத்துக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஒதியத்தூர் மற்றும் அதை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், உபயதாரர்கள், விழாக் குழுவினர் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story