காரில் வந்தவரிடம் ரூ7 லட்சம் பறிமுதல்
காரில் வந்தவரிடம் ரூ7 லட்சம் பறிமுதல்
திருப்பூர்,
திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பறக்கும்படையினர் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள். ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணத்தை ரொக்கமாக கொண்டு சென்றாலும், பரிசு பொருட்களை மொத்தமாக கொண்டு சென்றாலும் பறிமுதல் செய்து வருகிறார்கள். துணை வட்டார வளர்ச்சி அதிகாரி இந்திராணி தலைமையிலான பறக்கும்படை குழுவினர் நேற்று மாலை கொங்கு மெயின் ரோடு சின்னச்சாமி அம்மாள் மேல்நிலைப்பள்ளி அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனையிட்டனர். காருக்குள் ரூ.6 லட்சத்து 92 ஆயிரத்து 100 இருந்தது. காரில் வந்த கருவம்பாளையத்தை சேர்ந்த விவேக் வயது 42 என்பவரிடம் விசாரித்தனர். ஆனால் அவரிடம் பணத்துக்கான உரிய ஆவணங்கள் எதுவும் இல்லை. இதைத்தொடர்ந்து பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் திருப்பூர் மாநகராட்சி மைய அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
Related Tags :
Next Story