போலீஸ் கொடி அணிவகுப்பு
கம்பத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு போலீஸ் கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடந்தது.
கம்பம்:
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கவும், பாதுகாப்பு தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் போலீசாரின் கொடி அணிவகுப்பு கம்பத்தில் நேற்று நடைபெற்றது. கம்பம் வடக்கு போலீஸ் நிலையத்தில் இருந்து அணிவகுப்பு ஊர்வலத்தை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
போக்குவரத்து சிக்னல், காந்தி சிலை, வ.உ.சி, திடல், பார்க் ரோடு, நாட்டுக்கல், புதுப்பள்ளிவாசல், தங்க விநாயகர் கோவில், உத்தமபுரம் வழியாக, அரசு கள்ளர் பள்ளி அருகேயுள்ள தனியார் திருமண மண்டபத்தில் நிறைவடைந்தது. இதில் உத்தமபாளையம் உதவி போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரேயா குப்தா, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல், உத்தமபாளையம் சப்-டிவிஷனலில் பணிபுரியும் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story