பெண்ணாடம் அருகே உரிய ஆவணமின்றி எடுத்து வரப்பட்ட ரூ.3¼ லட்சம் பறிமுதல் பறக்கும்படையினர் அதிரடி
பெண்ணாடம் அருகே உரிய ஆவணமின்றி எடுத்து வரப்பட்ட ரூ.3¼ லட்சத்தை பறக்கும் படையினர் அதிரடியாக பறிமுதல் செய்தனர்.
பெண்ணாடம்,
பெண்ணாடம் பேரூராட்சி பறக்கும் படை அதிகாரி ஜெயச்சந்திரன் தலைமையிலான பறக்கும் படையினர் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக பணம், பரிசு பொருட்கள் வாகனங்களில் எடுத்துச் செல்லப்படுகிறதா? என இறையூர் மெயின் ரோட்டில் நேற்று அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவரை தடுத்து நிறுத்தி சோதனையிட்டு, விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர், திட்டக்குடியை அடுத்த பனையந்தூரை சேர்ந்த சிதம்பரம் மகன் இளவரசன்(வயது 23) என்பதும், உரிய ஆவணமின்றி ரூ.3 லட்சத்து 38 ஆயிரத்து 100-ஐ எடுத்து வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து உரிய ஆவணமின்றி எடுத்து வரப்பட்ட பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து, பெண்ணாடம் உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி சண்முகவேலிடம் ஒப்படைத்தனர்.
Related Tags :
Next Story