ராணுவ வீரரின் வீட்டில் திருட்டு
ராணுவ வீரரின் வீட்டில் நடந்த திருட்டு பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காரியாபட்டி,
காரியாபட்டி அருகே பிச்சம்பட்டியை சேர்ந்தவர் ராமசந்திரன் (வயது 33). இவர் இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார். இதையடுத்து காரியாபட்டியில் உள்ள வீட்டை பூட்டிவிட்டு டெல்லியில் மனைவி, குழந்தைகளுடன் வசித்து வருகிறார். காரியாபட்டியில் உள்ள வீட்டின் கதவு திறந்து கிடப்பதாக பக்கத்துவீட்டுக்காரர்கள் ராமச் சந்திரனுக்கு தகவல் வந்துள்ளது. அவர் காரியாபட்டி வந்து வீட்டை பார்த்தபோது வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு வீட்டினுள் இருந்த 2 சி.சி.டி.வி. கேமரா, 4 குத்து விளக்குகள், 2 பவுன் தோடு, எல்.இ.டி. டி.வி. உள்ளிட்ட பொருட்கள் திருடு போனது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த ராமச் சந்திரன் காரியாபட்டி போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில் காரியாபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
Related Tags :
Next Story