பண்ணைக்குள் புகுந்து 30 கோழிகள் திருட்டு


பண்ணைக்குள் புகுந்து 30 கோழிகள் திருட்டு
x
தினத்தந்தி 8 Feb 2022 10:12 PM IST (Updated: 8 Feb 2022 10:12 PM IST)
t-max-icont-min-icon

பட்டிவீரன்பட்டி அருகே பண்ணைக்குள் புகுந்து 30 கோழிகளை மர்மநபர்கள் திருடி சென்றனர்.

பட்டிவீரன்பட்டி:
பட்டிவீரன்பட்டி அருகே அய்யம்பாளையம் சாத்தாகோவில் ரோட்டில் சக்திவேல் என்பவரது செக்கு எண்ணெய் மில் உள்ளது. நேற்று முன்தினம் இரவு மர்மநபர்கள், மில்லின் முன்புற கேட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் அவர்கள் பீரோவில் இருந்த ரூ.7 ஆயிரத்தை திருடி விட்டு அங்கிருந்து சென்றுவிட்டனர். பின்னர் அவர்கள், அதேசாலையில் உள்ள மஸ்தான் என்பவரின் கோழி பண்ணையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். அங்கிருந்த ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள 30 நாட்டுகோழிகளை அவர்கள் திருடி சென்றுவிட்டனர்.
முன்னதாக அவர்கள், அப்பகுதியில் உள்ள பத்ரகாளியம்மன் கோவிலின் முன்புற கேட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்றனர். பின்னர் அவர்கள் கோவில் சன்னதியின் கதவை திறக்க முயற்சி செய்தனர். ஆனால் அவர்களால் அதை திறக்க முடியவில்லை. இதனால் அவர்கள் அங்கிருந்து திரும்பி சென்று விட்டனர்.
இதுகுறித்து பட்டிவீரன்பட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அடுத்தடுத்து நடந்த இந்த தொடர் திருட்டால் அய்யம்பாளையம் மக்கள் பீதியடைந்து உள்ளனர்.

Next Story