இளம்பெண்ணிடம் உல்லாசம் அனுபவித்துவிட்டு திருமணத்திற்கு மறுப்பு: என்ஜினீயருக்கு 10 ஆண்டு சிறை கடலூர் மகிளா கோர்ட்டு தீர்ப்பு
இளம்பெண்ணிடம் உல்லாசம் அனுபவித்துவிட்டு திருமணத்திற்கு மறுத்த என்ஜினீயருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து கடலூர் மகிளா கோர்ட்டு தீர்ப்பளித்தது.
கடலூர்,
காதல்
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள கீழ்செருவாயை சேர்ந்தவர் ரத்தினம். ஓய்வுபெற்ற ஆசிரியர். இவரது மகன் பிரதாப் (வயது 27). என்ஜினீயரிங் படித்துள்ள இவர் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். இவர் கடந்த 2014-ம் ஆண்டு டி.இளமங்கலத்தில் உள்ள தனது பெரியப்பா வீட்டுக்கு சென்று வந்த போது, அதே பகுதியை சேர்ந்த 26 வயதுடைய இளம்பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது.
இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்கிடையே காதலாக மாறியது. இதையடுத்து பிரதாப், திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அந்த இளம்பெண்ணுடன் பலமுறை உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார்.
கருக்கலைப்பு
இதனால் அந்த இளம்பெண் கர்ப்பமானார். இதையடுத்து பிரதாப், கடந்த 23.6.2015 அன்று இளம்பெண்ணை வெலிங்டன் ஏரிக்கரைக்கு அழைத்து சென்று கருக்கலைப்பு மாத்திரை வாங்கி கொடுத்து கருக்கலைப்பு செய்துள்ளார்.
அதன் பிறகும் அவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்தனர். இந்த நிலையில் அந்த இளம்பெண், பிரதாப்பிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார். அதற்கு அவர் திருமணம் செய்ய மறுப்பு தெரிவித்தார்.
10 ஆண்டு சிறை
இதில் அதிர்ச்சியடைந்த அந்த இளம்பெண், விருத்தாசலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரதாப்பை கைது செய்தனர். மேலும் இதுதொடர்பாக கடலூர் மகிளா கோர்ட்டில் வழக்கு தொடுத்தனர்.
இதில் சாட்சிகள் விசாரணை முடிவடைந்த நிலையில், நேற்று இவ்வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது.
அதில் நீதிபதி பாலகிருஷ்ணன் தனது தீர்ப்பில், குற்றம் சாட்டப்பட்ட பிரதாப்புக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். இவ்வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் வளர்மதி ஆஜராகி வாதாடினார்.
Related Tags :
Next Story