தலைமறைவு குற்றவாளி கோர்ட்டில் ஆஜராக உத்தரவு
தலைமறைவு குற்றவாளி கோர்ட்டில் ஆஜராக உத்தரவிட்டு உள்ளது.
தாயில்பட்டி,
தாயில்பட்டி கலைஞர் காலனியை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 40). பட்டாசு தொழிலாளி. இவரது மனைவி அழகு லட்சுமி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாரிமுத்துவை தேடி வந்தனர். இந்த வழக்கு தொடர்பாக சாத்தூர் கோர்ட்டில் 24.2.21 அன்று அவருக்கு பிடிவாரண்டு பிறபிக்கப்பட்டது. அன்று முதல் இன்று வரை தலைமறைவாக இருந்து வருகிறார். அதனால் சாத்தூர் குற்றவியல் நீதிமன்றம் கோர்ட்டில் அறிவிக்கப்பட்ட குற்ற வாளியாக மாரிமுத்துஅறிவிக்கப்பட்டு 14.2.2022 சாத்தூர் கோர்ட்டில் ஆஜராக உத்தரவு பிறப்பித்துள்ளது. அதற்கான நோட்டீசை தாயில்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகம், கிராம நிர்வாக அலுவலகம், உள்பட முக்கிய இடங்களில் வெம்பக் கோட்டை போலீசார் சார்பில் ஒட்டப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story