ஆற்றில் மூழ்கிய முதியவர் உயிருடன் மீட்பு


ஆற்றில் மூழ்கிய முதியவர் உயிருடன் மீட்பு
x
தினத்தந்தி 8 Feb 2022 10:22 PM IST (Updated: 8 Feb 2022 10:22 PM IST)
t-max-icont-min-icon

பேரளம் அருகே ஆற்றில் மூழ்கிய முதியவரை உயிருடன் மீட்ட தீயணைப்பு வீரர்களை பொதுமக்கள் பாராட்டினர்.

நன்னிலம்:-

பேரளம் அருகே ஆற்றில் மூழ்கிய முதியவரை உயிருடன் மீட்ட தீயணைப்பு வீரர்களை பொதுமக்கள் பாராட்டினர். 

ஆற்றில் மூழ்கினார்

திருவாரூர் மாவட்டம் பேரளம் அருகே உள்ள கட்டளை தெருவை சேர்ந்தவர் நடராஜன் (வயது60). இவர் பேரளம் அருகே உள்ள அரசலாற்றுக்கு நேற்று காலை குளிக்க சென்றார். அப்போது ஆற்றில் உள்ள பள்ளத்தில் சிக்கி நீரில் மூழ்கினார். 
இதனால் ஆற்றில் தத்தளித்த அவர் உதவும்படி கூச்சல் போட்டார். சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் இதுகுறித்து உடனடியாக பேரளம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். 

உயிருடன் மீட்பு

தகவலின்பேரில் தீயணைப்பு வீரர்கள் நிலைய அலுவலர் மணிவண்ணன் தலைமையில் அங்கு விரைந்து சென்று மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். 
இதில் தீயணைப்பு வீரர்கள் மிதவை மற்றும் கயிறு உள்ளிட்டவற்றை கொண்டு ஆற்றில் மூழ்கிய நடராஜனை உயிருடன் மீட்டனர். ஆற்றில் மூழ்கி உயிருக்கு போராடிய முதியவரை உயிருடன் மீட்ட தீயணைப்பு வீரர்களை அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பாராட்டினர்.

Next Story