பதற்றமான வாக்குச்சாவடிகளை தேர்தல் பார்வையாளர் ஆய்வு


பதற்றமான வாக்குச்சாவடிகளை தேர்தல் பார்வையாளர் ஆய்வு
x
தினத்தந்தி 8 Feb 2022 10:30 PM IST (Updated: 8 Feb 2022 10:30 PM IST)
t-max-icont-min-icon

திருவாரூர் நகராட்சியில் உள்ள பதற்றமான வாக்குச்சாவடிகளை தேர்தல் பார்வையாளர் ஆனந்த்மோகன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

திருவாரூர்:-

திருவாரூர் நகராட்சியில் உள்ள பதற்றமான வாக்குச்சாவடிகளை தேர்தல் பார்வையாளர் ஆனந்த்மோகன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பதற்றமான வாக்குச்சாவடிகள்

திருவாரூர் நகராட்சி தேர்தல் வருகிற 19-ந் தேதி (சனிக்கிழமை) நடக்கிறது. இங்கு உள்ள 30 வார்டுகளில் 23 ஆயிரத்து 838 ஆண் வாக்காளர்கள், 26 ஆயிரத்து 405 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 50 ஆயிரத்து 245 வாக்காளர்கள் உள்ளனர். தேர்தல் வாக்குப்பதிவிற்காக ஆண்களுக்கான வாக்குச்சாவடிகள் 27, பெண்களுக்கான வாக்குச்சாவடிகள் 27, 3 பொது வாக்குச்சாவடிகள் என 57 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 3 வாக்குச்சாவடிகள் பதற்றமான வாக்குச்சாவடிகள் என கண்டறியப்பட்டுள்ளது. 

தேர்தல் பார்வையாளர்

இந்த நிலையில் திருவாரூர் ஜி.ஆர்.எம்.பெண்கள் மேல்நிலைப்பள்ளி, நியூபாரத் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கவுரிசாமி நகராட்சி பள்ளி என 3 பதற்றமான வாக்குசாவடிகளை தேர்தல் பார்வையாளர் ஆனந்த்மோகன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 
அப்போது வாக்குச்சாவடிகளில் சாய்வுதள வசதிகள், மின்சாரம், குடிநீர் மற்றும் கழிவறை வசதிகளை ஆய்வு செய்தார். மேலும் தேவையான பாதுகாப்பு வசதிகள் மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். அப்போது நகரமைப்பு ஆய்வாளர் கணேசரெங்கன் உடனிருந்தார்.

Next Story