ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஊராட்சி செயலாளர் கைது


ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஊராட்சி செயலாளர் கைது
x
தினத்தந்தி 8 Feb 2022 10:45 PM IST (Updated: 8 Feb 2022 10:45 PM IST)
t-max-icont-min-icon

பட்டாசு கடை கட்டிட வரைபட அனுமதிக்கு ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஊராட்சி செயலாளர் கைது செய்யப்பட்டார்.

சாத்தூர், 
பட்டாசு கடை கட்டிட வரைபட அனுமதிக்கு ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஊராட்சி செயலாளர் கைது செய்யப்பட்டார். 
ரூ.20 ஆயிரம் லஞ்சம்
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தாலுகா வெங்கடாசலபுரத்தை சேர்ந்தவர் திருமலைராஜன் (வயது 50). இவர் மேட்டமலை கிராமத்தில் பட்டாசு கடை கட்டுவதற்காக கட்டிட வரைபட அனுமதி கோரி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஊராட்சி செயலாளர் கதிரேசனிடம் மனு அளித்துள்ளார். 
இதற்கு ரூ.20 ஆயிரம் லஞ்சமாக தரவேண்டும் என ஊராட்சி செயலாளர் கேட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து திருமலைராஜன் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார். 
அதன்பேரில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் அதிகாரிகள், திருமலைராஜனிடம் ரசாயன பவுடர் தடவிய ரூ.20 ஆயிரத்தை கொடுத்து, கதிரேசனிடம் கொடுக்கும்படி கூறி அனுப்பி வைத்தனர்.
கையும், களவுமாக கைது
இதையடுத்து திருமலைராஜன் ஊராட்சி அலுவலகத்துக்கு சென்று, அந்த பணத்தை கதிரேசனிடம் கொடுத்துள்ளார். அப்போது அங்கு மறைந்து நின்றிருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை சூப்பிரண்டு ராமச்சந்திரன், இன்ஸ்பெக்டர் பூமிநாதன், சப்-இன்ஸ்பெக்டர் பாரதிபிரியா ஆகியோர் ஊராட்சி செயலாளர் கதிரேசனை கையும், களவுமாக பிடித்து அவரிடம் இருந்த ரூ.20 ஆயிரத்தை பறிமுதல் செய்து கைது செய்தனர். 
மேலும் மேட்டமலை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் தொடர்ந்து சோதனை நடத்தினர். இந்த நடவடிக்கையால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story