நாமகிரிப்பேட்டையில் ரூ.9 லட்சத்துக்கு மஞ்சள் ஏலம்
நாமகிரிப்பேட்டையில் ரூ.9 லட்சத்துக்கு மஞ்சள் ஏலம் நடந்தது.
ராசிபுரம்:
மஞ்சள் ஏலம்
நாமகிரிப்பேட்டையில் உள்ள ராசிபுரம் தாலுகா கூட்டுறவு வேளாண்மை உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனை சங்க கிளை வளாகத்தில் மஞ்சள் ஏலம் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை நடந்து வருகிறது. வழக்கம் போல் நேற்று மஞ்சள் ஏலம் நடந்தது.
இந்த ஏலத்தில் நாமகிரிப்பேட்டை, ஒடுவன்குறிச்சி, புதுப்பட்டி, முள்ளுக்குறிச்சி, மெட்டாலா, பேளுக்குறிச்சி, அரியாக்கவுண்டம்பட்டி, ஆத்தூர், ஊனத்தூர் உள்பட பல்வேறு பகுதிகளிலிருந்து விவசாயிகள் மஞ்சளை விற்பனை செய்வதற்காக ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர். சேலம், ஈரோடு, நாமகிரிப்பேட்டை, ஒடுவன்குறிச்சி, ஆத்தூர், உள்பட பல்வேறு பகுதிகளிலிருந்து வியாபாரிகள் வந்திருந்து மஞ்சளை போட்டி போட்டு ஏலம் எடுத்தனர்.
ரூ.9 லட்சத்துக்கு விற்பனை
ஏலத்துக்கு விரலி ரகம் 200 மூட்டைகளும், உருண்டை ரகம் 50 மூட்டைகளும், பனங்காலி ரகம் 5 மூட்டைகளும் கொண்டு வரப்பட்டு இருந்தன. இதில் விரலி ரகம் ஒரு குவிண்டால் குறைந்தபட்சமாக ரூ.5 ஆயிரத்து 865 முதல் அதிகப்பட்சமாக ரூ.8 ஆயிரத்து 969-க்கும், உருண்டை ரகம் ஒரு குவிண்டால் குறைந்தபட்சமாக ரூ.6 ஆயிரத்து 42 முதல் அதிகப்பட்சமாக ரூ.6 ஆயிரத்து 812-க்கும், பனங்காலி ரகம் ஒரு குவிண்டால் குறைந்தபட்சம் ரூ.14 ஆயிரத்து 445 முதல் அதிகபட்சமாக ரூ.17 ஆயிரத்து 512-க்கும் ஏலம் விடப்பட்டது. நேற்று நடந்த ஏலத்தில் 255 மஞ்சள் மூட்டைகள் ரூ.9 லட்சத்துக்கு விற்பனையாகின.
Related Tags :
Next Story