2 ம் கட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் ஒதுக்கீடு செய்யும் பணி கள்ளக்குறிச்சி கலெக்டர் ஸ்ரீதர் தலைமையில் நடைபெற்றது
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி 2-ம் கட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் ஒதுக்கீடு செய்யும்பணி கலெக்டர் ஸ்ரீதர் தலைமையில் நடைபெற்றது
கள்ளக்குறிச்சி
200 வாக்குச்சாவடிகள்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை, திருக்கோவிலூர் ஆகிய 3 நகராட்சிகள், சங்கராபுரம், சின்னசேலம், தியாகதுருகம், மணலூர்பேட்டை, வடக்கனந்தல் ஆகிய 5 பேரூராட்சிகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந் தேதி நடைபெறவுள்ளது. இதற்காக 200 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு எந்திரங்கள் 2-ம் கட்ட ஒதுக்கீடு செய்யும் பணி மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான ஸ்ரீதர் தலைமையில் தேர்தல் பொது பார்வையாளர் மெர்சி ரம்யா மற்றும் அனைத்து கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் நடைபெற்றது. இதில் கணினி மூலம் வாக்குப்பதிவு எந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
முன்னேற்பாடு பணிகள்
தொடர்ந்து கலெக்டர் கூறும்போது, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தேர்தலுக்கான அனைத்து முன்னேற்பாடு பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அனைத்து வாக்குச்சாவடிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகள் குறித்து தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. மேலும் பதற்றமான வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமராக்கள் அமைத்து 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு பயன்படுத்தப்படும் வாக்குப்பதிவு எந்திரங்கள் முதற்கட்ட ஒதுக்கீடு செய்யும் பணி நிறைவுபெற்று தற்போது 2-ம் கட்டமாக வாக்குப்பதிவு எந்திரங்கள் ஒதுக்கீடு செய்யும் பணி நடைபெற்றது என்றார்.
இதில் கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை ஆகிய நகராட்சிகளின் ஆணையர்கள், தியாகதுருகம், வடக்கனந்தல், சின்னசேலம், சங்கராபுரம், மணலூர்பேட்டை ஆகிய பேரூராட்சிகளின் செயல் அலுவலர்கள் மற்றும் அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story