தூக்குப்போட்டு பிளஸ்-2 மாணவர் தற்கொலை


தூக்குப்போட்டு பிளஸ்-2 மாணவர் தற்கொலை
x
தினத்தந்தி 8 Feb 2022 11:08 PM IST (Updated: 8 Feb 2022 11:08 PM IST)
t-max-icont-min-icon

மயிலாடுதுறையில், தூக்குப்போட்டு பிளஸ்-2 மாணவர் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மயிலாடுதுறை:
மயிலாடுதுறையில், தூக்குப்போட்டு பிளஸ்-2 மாணவர் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பிளஸ்-2 மாணவர்
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் தாலுகா கீழ்ப்பம்பட்டி அருகில் உள்ள கேதைஇருப்பூர் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயராமன் மகன் மதன்குமார்(வயது 17). பிளஸ்-2 படித்து வந்த இவர், படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு மயிலாடுதுறையில் உள்ள தனது மாமா வீட்டிற்கு வந்து அவர் நடத்தி வந்த பர்னிச்சர் கடையில் வேலை பார்த்து வந்தார். 
தவணை முறையில் பொருட்கள் வாங்கி் சென்றவர்களிடம் பணம் வசூல் செய்யும் வேலையை மதன்குமார் பார்த்து வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது தாய்க்கு போன் செய்து வேலை பிடிக்கவில்லை என்பதால் ஊருக்கு வருகிறேன் என தெரிவித்துள்ளார். அதற்கு அவர், இப்போது ஊருக்கு வரவேண்டாம். இன்னும் சில மாதங்கள் அங்கே இருந்து அந்த வேலையை செய் என கூறி உள்ளார்.
தூக்குப்போட்டு தற்கொலை
இதனால் மன உளைச்சலில் இருந்து வந்த மதன்குமார், தனது மாமா வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த மயிலாடுதுறை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மதன்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக மதன்குமாரின் தந்தை ஜெயராமன் கொடுத்த புகாரின் பேரில் மயிலாடுதுறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story