நந்தி நாதேஸ்வரர் கோவிலில் மாசிமக திருவிழா
நாகை வடக்கு பொய்கை நல்லூரில் நந்தி நாதேஸ்வரர் கோவிலில் மாசிமக திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
வெளிப்பாளையம்:
நாகையை அடுத்த வடக்கு பொய்கை நல்லூரில் உள்ள நந்தி நாதேஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் மாசிமக பிரம்மோற்சவ விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு விழா நேற்று காலை விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. பின்னர் காலை 8.30 மணி அளவில் கோவிலில் உள்ள கொடிமரத்தில் கொடி ஏற்றப்பட்டது. அதனை தொடர்ந்து அபிஷேக, ஆராதனைகளும் பஞ்சமூர்த்திகள் புறப்பாடும் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மாசிமக தீர்த்தவாரி வருகிற 17-ந்தேதி (வியாழக்கிழமை) நடக்கிறது. அப்போது சாமி, அம்மனுடன் அஸ்திரதேவருக்கு கல்லார் கடற்கரையில் சிறப்பு பூஜைகளுடன் தீர்த்தவாரி நடைபெறும. 19-ந்தேதி அம்மன் ஊஞ்சல் உற்சவம் நடைபெறுகிறது.
Related Tags :
Next Story