பாம்பனில் மீனவர்கள் கடலில் இறங்கி ஆர்ப்பாட்டம்
இலங்கை கடற்படையை கண்டித்தும், மீனவர்களின் படகுகள் ஏலம் விடுவதை உடனடியாக நிறுத்த வலியுறுத்தியும் பாம்பனில மீனவர்கள் கடலில் இறங்கி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ராமேசுவரம்,
கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவை விவரம்் வருமாறு:-
இலங்கையில் தமிழக மீனவர்களின் படகுகளை ஏலம் விடும் இலங்கை அரசை கண்டிப்பதாகவும், ஏலம் விடும் நடவடிக்கையை உடனடியாக நிறுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதுபோல் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டும் தமிழகம் அழைத்து வரப்படாமல் உள்ள தமிழக மீனவர்கள் 56 பேரை உடனடியாக அழைத்து வர நடவடிக்கை எடுக்கவும், ராமேசுவரத்திலிருந்து மீன்பிடிக்க சென்ற 3 படகுகளுடன் 11 மீனவர்களை கைது செய்ததற்கு கண்டனம் தெரிவிப்பதோடு உடனடியாக அவர்களை விடுதலை செய்ய கோரி பாம்பனில் ரெயில் மறியல் போராட்டம் நடத்துவது என்றும் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. எந்த தேதியில் என்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும். என்றும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தின்போது மீனவர் ஒருவர் மீனவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் அடுத்தகட்டமாக உடலில் மண்எண்ணெயை ஊற்றி போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் தெரிவித்தபடி கையில் மண்எண்ணெய் கேனை வைத்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டார்.
Related Tags :
Next Story