திருவாரூர் மாவட்டத்தில், ரேஷன் கடை ஊழியர்கள் வேலை நிறுத்தம்
திருவாரூர் மாவட்டத்தில், ரேஷன் கடை ஊழியர்கள் வேலை நிறுத்தம்
திருவாரூர்:-
17 சதவீதம் அகவிலைப்படி வழங்க வலியுறுத்தி நியாய விலைக்கடை பணியாளர் சங்கத்தின் சார்பில் ஒரு நாள் விடுப்பு எடுத்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி நேற்று தமிழகம் முழுவதும ரேஷன் கடை ஊழியர்கள் ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் ஒரு பகுதியாக திருவாரூர் மாவட்டத்தில் ரேஷன் கடை ஊழியர்கள் ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு நியாயவிலை கடை பணியாளர் சங்கத்தின் மாவட்ட தலைவர் குணசீலன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ஹரிஹரன், மாவட்ட பொருளாளர் சுவாமிநாதன் மற்றும் சங்கத்தை சேர்ந்த ஊழியர்கள் ரேஷன் கடைகளை அடைத்து ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்டத்தில் 600 கடைகள் அடைக்கப்பட்டு இருந்ததால் அத்தியாவசிய பொருட்கள் வழங்கும் பணி பாதிக்கப்பட்டது. இதனால் மக்கள் அவதிப்பட்டனர்.
Related Tags :
Next Story