ஆவணம் இன்றி எடுத்து செல்லப்பட்ட ரூ.10 லட்சம் பறிமுதல்


ஆவணம் இன்றி எடுத்து செல்லப்பட்ட ரூ.10 லட்சம் பறிமுதல்
x
தினத்தந்தி 8 Feb 2022 11:54 PM IST (Updated: 8 Feb 2022 11:54 PM IST)
t-max-icont-min-icon

பேரளம் அருகே ஆவணம் இன்றி எடுத்து செல்லப்பட்ட ரூ.10 லட்சத்தை தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

நன்னிலம்:-

பேரளம் அருகே ஆவணம் இன்றி எடுத்து செல்லப்பட்ட ரூ.10 லட்சத்தை தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

வாகன சோதனை

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந் தேதி(சனிக்கிழமை) நடக்கிறது. இதை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டு உள்ளன. வாக்காளர்களுக்கு ஓட்டுக்கு பணம் மற்றும் அன்பளிப்பு பொருட்கள் வினியோகம் செய்யப்படுவதை தடுக்க தேர்தல் பறக்கும் படையினர் நியமிக்கப்பட்டு உள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தாலுகா பேரளம் பேரூராட்சிக்கு உட்பட்ட பேரளம்-காரைக்கால் சாலையில் உள்ள பண்டாரவாடை பகுதியில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் பரஞ்சோதி தலைமையிலான குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். 

ரூ.10 லட்சம் பறிமுதல்

அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரை வழிமறித்து சோதனை செய்தனர். இதில் மோட்டார் சைக்கிளில் இருந்த ஒரு பையில் ரூ.10 லட்சத்து 32 ஆயிரத்து 952 இருப்பது தெரிய வந்தது. மோட்டார் சைக்கிளில் வந்தவர் மன்னார்குடி காரியமங்கலம் முகமதியர் தெருவை சேர்ந்த சகாபுதீன் மகன் முகமது ரில்பான் என்பது தெரிய வந்தது. 
இந்த பணத்துக்கான எந்த ஒரு ஆவணமும் இல்லாததால் தேர்தல் பறக்கும் படை அதிகாரி பரஞ்சோதி மற்றும் போலீசார் பணத்தை பறிமுதல் செய்து பேரளம் பேரூராட்சி அலுவலகத்தில் செயல் அலுவலர் கண்ணனிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து செயல் அலுவலர் பணத்தை நன்னிலம் கருவூலத்தில் ஒப்படைத்தார்.

Next Story