ஆதீனம் பட்டண பிரவேசம்


ஆதீனம் பட்டண பிரவேசம்
x
தினத்தந்தி 9 Feb 2022 12:16 AM IST (Updated: 9 Feb 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

திருவாவடுதுறையில் ஆதீனம் பட்டண பிரவேசம் நடந்தது.

குத்தாலம்:
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே திருவாவடுதுறை ஆதீனம் உள்ளது. திருவாவடுதுறை ஆதீனத்தை 14-ம் நூற்றாண்டில் தோற்றுவித்த ஆதீன குருமுதல்வர் நமச்சிவாய மூர்த்தி சுவாமிகளின் குருபூஜை ஆண்டுதோறும் தை மாதத்தில் 10 நாட்கள் மகரதலைநாள் குருபூஜை விழாவாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு குரு பூஜை கடந்த மாதம் 29-ந்தேதி தொடங்கி நடைபெற்று வந்த நிலையில் 10-ம் நாளான நேற்று முன்தினம் குருபூஜை விழா, மகேஸ்வர பூஜை ஆகியன நடந்தன. இதைதொடர்ந்து ஆதீன மடத்தில் திருவாவடுதுறை ஆதீனம் அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், கோமுக்தீஸ்வரர் கோவிலில் தரிசனம் மேற்கொண்டு, நமசிவாய மூர்த்திகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்தார். தொடர்ந்து பக்தர்கள் புடைசூழ திருவாவடுதுைற ஆதீனம் பல்லக்கில் ஏறி அமர்ந்தார். இதையடுத்து பட்டண பிரவேசம் நடந்தது. இதில் சூரியனார்கோவில் ஆதீனம் 28-வது குருமகாசன்னிதானம். மகாலிங்க தேசிக பரமாசாரிய சுவாமிகள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Next Story