திருவண்ணாமலை மாவட்டத்தில் ரேஷன் கடை பணியாளர்கள் ஒரு நாள் தற்செயல் விடுப்பு போராட்டம்
திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று நியாய விலைக்கடை பணியாளர் சங்கம்சார்பில் ஒருநாள் தற்செயல் விடுப்பு போராட்டம் நடந்தது. இதனால்1,573 கடைகள் அடைக்கப்பட்டிருந்தது.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று நியாய விலைக்கடை பணியாளர் சங்கம்சார்பில் ஒருநாள் தற்செயல் விடுப்பு போராட்டம் நடந்தது. இதனால்1,573 கடைகள் அடைக்கப்பட்டிருந்தது.
தற்செயல் விடுப்பு போராட்டம்
தமிழ்நாடு நியாய விலைக்கடை பணியாளர் சங்கம் சார்பில், தமிழக அரசு நிறுத்தி வைத்துள்ள அகவிலைப்படி உயர்வை உடனடியாக வழங்க கோரி நேற்று திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரு நாள் தற்செயல் விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் 1,627 நியாய விலைக் கடைகள் உள்ளது. போராட்டம் காரணமாக நேற்று 1,573 கடைகள் அடைக்கப்பட்டு ரேஷன் பொருட்கள் விற்பனை நடைபெறவில்லை.
729 பணியாளர்கள் தற்செயல் விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து மாநில செயலாளர் சேகர் கூறுகையில், கொரோனா பெருந்தொற்று காலத்திலும் நியாய விலைக் கடை பணியாளர்கள் அரசின் நலத்திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்த்தனர். மேலும் பொங்கல் பரிசுத் தொகுப்பை எந்த எதிர்ப்பார்ப்பும் இன்றி வழங்கினர்.
அகவிலைப்படி உயர்வு
அதற்கான பயணச் செலவு, ஊக்கத் தொகை வழங்கப்படவில்லை. இந்த நிலையில் அகவிலைப்படி உயர்வை அரசு நிறுத்தி வைத்து உள்ளது மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது. எங்கள் கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் ஒரு நாள் தற்செயல் விடுப்பு போராட்டம் நடைபெற்றது. எனவே நியாய விலைக்கடை பணியாளர்களுக்கு 31 சதவீத அகவிலைப்படி உயர்வை அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்றார். மாவட்ட செயலாளர் சண்முகம், பொருளாளர் ஜெயசங்கர் மற்றும் பலர் உடனிருந்தனர்.
தண்டராம்பட்டு
தண்டராம்பட்டு தாலுகாவிலுள்ள அனைத்து ரேஷன் கடைகளையும் அடைத்து விட்டு காத்திருப்பு போராட்டத்தில் விற்பனையாளர்கள் ஈடுபட்டனர்.
போராட்டத்திற்கு மாநில செயலாளர் சேகர் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட செயலாளர் சண்முகம், பொருளாளர் ஜெய்சங்கர், வட்ட தலைவர் சேகர் உள்பட 59 ரேஷன் கடைகளின் விற்பனையாளர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story