மாணவியிடம் சில்மிஷம் செய்த தலைமை ஆசிரியர். பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டு மறியல்


மாணவியிடம் சில்மிஷம் செய்த தலைமை ஆசிரியர். பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டு மறியல்
x
தினத்தந்தி 9 Feb 2022 12:47 AM IST (Updated: 9 Feb 2022 12:47 AM IST)
t-max-icont-min-icon

மாணவியிடம் தலைமை ஆசிரியர் சில்மிஷம் செய்ததால் பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டு மறியலில் ஈடுபட்டனர்.

கலசபாக்கம்

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கத்தை அடுத்த மேலாரணி மதுரதாங்கல் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். கொரோனா ஊரடங்கிற்கு பின் கடந்த 1-ந் தேதி பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், 5-ம் வகுப்புகளில் படிக்கும் சில மாணவிகளிடம் தலைமை ஆசிரியர் காளியப்பன் (வயது55) பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டு வருவதாக பாதிக்கப்பட்ேடார் பெற்றோர்களிடம் தெரிவித்தனர். 

இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர்கள், நேற்று பள்ளியை முற்றுகையிட்டு, தலைமை ஆசிரியர் காளியப்பன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மேல்சோழங்குப்பம் சாலையில் மாணவ, மாணவிகளுடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. 

தகவலறிந்த போளூர் துணை போலீஸ் சூப்பிரண்டு குணசேகரன், கல்வி துறை அதிகாரிகள் மற்றும் கலசபாக்கம் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தலைமை ஆசிரியர் காளியப்பன் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்கள் உறுதி அளித்தனர். அதைத் தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.

Next Story