திருவண்ணாமலை நெடுஞ்சாலைத்துறை அலுவலர் வீட்டில் 9½ பவுன் நகை திருட்டு


திருவண்ணாமலை நெடுஞ்சாலைத்துறை அலுவலர் வீட்டில் 9½ பவுன் நகை திருட்டு
x
தினத்தந்தி 9 Feb 2022 12:47 AM IST (Updated: 9 Feb 2022 12:47 AM IST)
t-max-icont-min-icon

நெடுஞ்சாலைத்துறை அலுவலர் வீட்டில் 9½ பவுன் நகையை மர்ம நபர்கள் திருடிச்சென்று விட்டனர்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை வேங்கிக்கால் இடுக்கு பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் தெய்வசிகாமணி. இவரது மனைவி கவிதா. இவர் ெநடுஞ்சாலைத்துறையில் உதவி வரைவு அலுவலராக பணிபுரிந்து வருகிறார். இவரது மாமனார் இறந்து விட்டதால் இறுதி சடங்கில் கலந்து கொள்வதற்காக கடந்த 5-ந் தேதி வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் கடலூர் சென்றார். 

பின்னர் அவர் நேற்று முன்தினம் வீடு திரும்பியபோது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததைகண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதையடுத்து அவர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 2 வெள்ளி குத்து விளக்கு, ஒரு ஜோடி வைர கம்மல், 9½ பவுன் தங்க நகைகள், ரூ.7 ஆயிரம் ரொக்கம் ஆகியவை மர்ம நபர்களால் திருடப்பட்டு இருந்தது. 

இது குறித்து திருவண்ணாமலை தாலுகா போலீசில் கவிதா புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Next Story